உங்களுக்கு வாஸ்து சம்பந்தமான எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்..வீடு அலுவலகம் போன்ற அனைத்திற்கும் வாஸ்து ஆலோசனைக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் முகவரி kalai.hinduism@gmail.com தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

01- அக்டோபர்- 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

Sunday, March 3, 2013

Vasthu for door : மனையடி சாஸ்திரம் : வாஸ்து சாஸ்திரபடி எத்தனை கதவு எத்தனை ஜன்னல் இருக்க வேண்டும் பாகம் இரண்டு ? . as per vastu how many doors should be there - part- 2 : வாஸ்து கலையரசன் காட்டுமன்னார்கோயில் - vasthu consultant at kattumannarkoil
உங்கள் வீடு கிழக்கு பார்த்து இருந்தால் நீங்கள் வடகிழக்கில் வடக்கு பக்கம் ஒட்டி வாசல் கதவு வைக்க வேண்டும்.
                                                       
உங்கள் வீடு தெற்கு நோக்கி இருந்தால் தென் கிழக்கில் கிழக்கு ஒட்டி வைக்க வாசல் கதவு வைக்க வேண்டும்.


உங்கள் வீடு வடக்கு நோக்கி இருந்தால் வடகிழக்கில் கிழக்கு திசை ஒட்டி வாசல் கதவு இருப்பது உத்தமம்.
உங்கள் வீடு மேற்கு நோக்கி இருந்தால் வடமேற்கில் வடக்கு ஒட்டி வாசல் கதவு வைக்க வேண்டும்.
மேலும் :

பொதுவாக ஜன்னல் , கதவு வீட்டில் இரட்டை படையில் இருக்க வேண்டும்.

எதிர் எதிரே வீடு இருந்தால் கதவுகள் நேர் எதிராக வரும்படி இருக்க கூடாது.

வடக்கிலும் கிழக்கிலும் அதிகமாக ஜன்னல் வைக்க வேண்டும்.

தெற்கிலும் மேற்கிலும் குறைவாக ஜன்னல் இருக்க வேண்டும்.

அணைத்து கதவும் ஜன்னலும் ஒரே மரமாக இருப்பது நல்லது.

வீட்டில் கதவு திறக்கும் போது சத்தம் வருவது வாஸ்து குற்றம். ஆகையால் சரி செய்ய வேண்டும்.

கதவில் விரிசல் ( crack ) இருந்தால் உடனடியாக சரி செய்யவும்.

இவை அனைத்தும் சரியாக இருந்தாலே கதவு ஜன்னல் வாஸ்து சூப்பர் என்று அர்த்தம்.

மேலும் வேறு வாஸ்து விளக்கத்துடன் சந்திப்போம்...

நன்றி 

கலையரசன் கலியபெருமாள் காட்டுமன்னார்கோயில் 

Friday, March 1, 2013

Vasthu for door : மனையடி சாஸ்திரம் : வாஸ்து சாஸ்திரபடி எத்தனை கதவு எத்தனை ஜன்னல் இருக்க வேண்டும் பாகம் ஒன்று ? . as per vastu how many doors should be there - part- 1 : BY VASTHU KALAIARASAN KATTUMANNARKOILஒரு வீட்டில் எத்தனை கதவு இருக்க வேண்டும் ?

ஒரே ஒரு தலை வாசல் கதவு இருந்தால் அந்த வீட்டில் முழுமையாக பாக்கியம் நிறைந்து இருக்கும்.

இரண்டு தலை வாசல் கதவு இருந்தால் அந்த வீட்டில் வாழும் குடும்பம் சுகமாக இருக்கும் .( இருபினும் ஒரு தலைவாசல் கதவு உள்ள வீட்டை விட கொஞ்சம் பலன் குறைவு தான் ).

ஆனால் மூன்று தலை வாசல் கதவு உள்ள வீடு பல பிரச்சனைகளை தரும்.

மூன்றுக்கு மேல தலை வாசல் கதவு உள்ள வீடு பல பல பிரச்சனைகளை தரும்.

உண்மையில் சொல்ல போனால் தலை வாசல் கதவு வடக்கு அல்லது கிழக்கில் தான் இருக்க வேண்டும்.

ஆனால் மேற்கிலும் தெற்கிலும் தலைவாசல் கதவு இருந்தால் சுப அலைகள் வீட்டில் தாங்காமல் அந்த வீட்டில் பாக்கியம் குறையும் அமைப்பு ஏற்படுகிறது.

இரண்டு தலை வாசல் கதவு :

இரண்டு கதவு இருந்தால் அவைகளின் பலன் :

கிழக்கில் ஒரு கதவும் வடக்கிலோ அல்லது மேற்கிலோ ஒரு கதவும்  இருந்தால் மிகவும் நல்ல பலன் கிடைக்கும்.

மேற்கில் ஒரு கதவும் கிழக்கிலோ அல்லது வடக்கிலோ ஒரு கதவும் இருந்தால் மிகவும் நல்லது.

தெற்கு திசையில் ஒரு கதவும்  மேற்கு திசையில் ஒரு கதவும் இருப்பது பல பிரச்சனை கொடுக்கும்.

தெற்கு திசையில் ஒரு கதவும் கிழக்கு திசையில் ஒரு கதவும் இருப்பது மிகவும் கெடு பலன் கொடுக்கும்.

Blogger Widgets