உங்களுக்கு வாஸ்து சம்பந்தமான எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்..வீடு அலுவலகம் போன்ற அனைத்திற்கும் வாஸ்து ஆலோசனைக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் முகவரி kalai.hinduism@gmail.com தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

01- அக்டோபர்- 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

Tuesday, January 29, 2013

வாடகை வீடு -- வாடகை வீட்டிலேயே வாழும் அமைப்பு யாருக்கு ? WHO WILL STAY AT RENT HOUSE FOR THEIR ENTIRE LIFE?


நாலாம் வீட்டு அதிபதி 6,8,12 இல் மறைந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும்  வாடகை வீட்டில் வாழும் அமைப்பு ஏற்படுகிறது.

சொந்த வீடு ஏற்பட அனேக தடைகள் வந்த வண்ணம் இருக்கும்.

Monday, January 14, 2013

VASTHU FOR HOME AFTER DEATH : வீட்டில் ஒருவர் இறந்தால் முக்கியமாக செய்ய வேண்டியது என்ன? WHEN ONE DIES AT HOME, WHAT HAS TO BE DONE AS PER SHASTRA ?


ஒருவர் அவிட்டம் ,சதயம் , பூரட்டாதி, ரேவதி, உத்தரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் இறந்தால் அந்த வீட்டை ஆறு மாதம் பூட்டியே வைக்க வேண்டும்.

ரோகினி நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால் அந்த வீட்டை நாலு மாதம் பூட்டிய வைக்க வேண்டும்.

கார்த்திகை , உத்தராடம் ஆகிய நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால் மூன்று மாதம் பூட்டியே வைத்திருக்க வேண்டும்.

மிருகசிரிசம், சித்திரை, புனர்பூசம் , விசாகம், ஆகிய இந்த நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால் அந்த வீட்டை இரண்டு மாதம் பூட்டியே வைக்க வேண்டும். 

பரிகாரம் :

வீட்டை பூட்டி வைக்க முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கு பரிகாரமாக மாலை 5:30 மனி முதல் மேலே குறிப்பிட்ட காலம்வரை தினசரி வீட்டில் விளக்கு எரிய செய்ய வேண்டும்.

மாலையில் கற்பூர ஆராதனை செய்ய வேண்டும்.

பித்தளை கிண்ணத்தில் நல்லெண்ணெய் விட்டு நவகிரக ஹோமம் செய்து அதை தானம் கொடுக்க வேண்டும்.


Thursday, January 10, 2013

VASTHU FOR BANGALOW : மாடி வீடு யோகம் , MULTI STOREY BUILDING, MANY HOUSES


நாலாம் வீடு சர லக்னமாக இருந்து நாலாம் அதிபதியும் சர லக்னத்தில் அமர்ந்து செவ்வாயும் சர லக்னத்தில் இருந்தால் பல மாடி வீடு வாங்கும் யோகம் ஏற்படும்.

இவை அனைத்தும் அந்த கிரகத்தின் திசா புத்தியில் நடைபெறும்.

Wednesday, January 9, 2013

ASTROLOGY FACTS : யாருடைய வீடு தீக்கிரையாகும் ? WHOSE HOUSE WILL BE BURNT ?


ஒருவருடை ஜாதகத்தில் நான்காம் அதிபதி பலம் இழந்து 

நாலாம் வீட்டில் ராகு கேது சனி சூரியன் போன்ற பாவிகள் இடம் பெற்று 

அந்த நாலாம் வீட்டை செவ்வாய் பார்வை செய்தால் 

அவருடை வீடு தீக்கிரையாகி நாசமாகும் அமைப்பு அதிகம் கானபடுகிறது.

Friday, January 4, 2013

VASTHU FOR LUXURY LIFE : சுகமான வாழ்க்கைக்கு வாஸ்து அவசியம் -- vastu is most important for healthy life கன்னி மூலை , ஈசான்ய மூலை, வாயு மூலை, குபேர மூலை ,அக்னி மூலை, பித்ரு மூலை,யமன் ஆதித்யன் வருணன் மூலை
நான் அடிகடி பலருக்கும் கூறுவதுண்டு .

அதாவது வடகிழக்கு திசையில் வாசற்படி வைத்து வீடு கட்டும்  போது  உன்னதமான நிலை உண்டாகிறது.

அதுபோல வீடு கட்ட தொடங்கும் போது வடக்கு கிழக்கு திசைகளில் எவ்வளவு அதிகமாக காலியிடம் விட முடியுமோ அவ்வளவு காலியிடம் விடுவது அருமையான அமைப்பாகும்.

தெற்கு, மேற்கு   திசைகளில் காலியிடம் குறைந்து ஒட்டி கட்டுவது உன்னத நிலையை உண்டாக்கும்.

ஜன்னல் வைக்கும் போது கூட வடக்கு , கிழக்கு திசைகளில் பெரிய ஜன்னல் வைப்பது வாஸ்து ரீதியாக வளமான வாழ்வை உண்டாக்கும்.

பொதுவாக ஜன்னல் அமைக்கும் போது இரட்டை படையாக ஜன்னல் அமைப்பது உத்தம பலனை உண்டாக்கும்.

மேலும் ஜன்னல் வைக்கும் வைக்கும் போது கூட வடக்கு ,கிழக்கு திசைகளில் எண்ணிக்கையில்  அதிகமாக ஜன்னல் வைப்பது ஏற்றமும் உயர்வும் தரும்.

தெற்கு மேற்கு பகுதிகளில் சிறு சிறு  ஜன்னல் அல்லது வேண்டிலடோர் வைப்பது உத்தம மான பலனை உண்டாகும்.


Blogger Widgets